Posts

விதை நெல் நேர்த்தி- உப்புக்கரைசல்

உப்புக்கரைசல் மூலம் விதை நெல் நேர்த்தி செய்யும் முறை.    இயற்கை விவசாயம் செய்யும் உழவர்கள் அனைவரும், தவறாமல் தெரிந்துகொள்ள வேண்டிய பாரம்பரிய விதைநேர்த்தி முறை தான், இந்த  #உப்புக்கரைசல் முறை.  இந்த முறையில் பிரித்தெடுக்கப்படும் விதை நெல், 100% முளைப்புத்திறன் கொண்டது. அனைத்து விதைகளும் தவறாமல் முளைக்கும்.  பாரம்பரிய நெல் வகைகளை இம்முறையில் பிரித்தெடுத்து, ஒற்றை நாற்று நடவு முறையில் இயற்கை விவசாயம் செய்தால், ஏக்கருக்கு 20மூட்டை மேல் நெல் கிடைக்கும்.  உப்புக்கரைசல் மூலப்பொருள்: 1.கல் உப்பு தேவையான அளவு 2.தண்ணீர் தேவையான அளவு 3.கோழி முட்டை-1 4. விதை நெல்.  5.பாத்திரம் தயாரிப்பு முறை: ஒரு  பெரிய பாத்திரத்தில் 15லிட்டர்(1கி விதை நெல்லுக்கு) தண்ணீர் ஊற்றி, அதில் முட்டையை மெதுவாக விடவும், முட்டை அடியில் சென்று தங்கிவிடும். இது நல்ல முட்டை க்கான பரிசோதனை. பிறகு அந்த தண்ணீர் பாத்திரத்தில் 3கிலோ கல்உப்பு கொட்டி, நன்றாக கலக்கவும். சுத்தமாக உப்பு கரைந்த பின்பு, கோழி முட்டையை மிதக்க விடவும்.  இப்போது முட்டை மிதப்பது நன்றாக தெரியும், இரண்டு ரூபாய் நாணய அளவுக்கு முட்டை வெளியே தெரியும் அளவுக்கு மிதக்க